அரக்கோணத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் திடீர் சாவு

அரக்கோணத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் திடீர் என உயிரிழந்தார்.

Update: 2022-05-08 14:27 GMT
அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 54) என்பவர் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவர்  சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார்.  அதிகாலையில் நெஞ்சு வலிபதாக உடன் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். 

உடனே அவரை பூந்தமல்லி அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்