கோவை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கேஎன்நேரு தெரிவித்தார்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கேஎன்நேரு தெரிவித்தார்;

Update: 2022-05-08 13:42 GMT

கோவை

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தொடக்க விழா

கோவை மாநகராட்சி பகுதியில் ரூ.5.59 கோடியில் முடிவுற்ற 9 பணிகள் தொடக்க விழா, ரூ.49.62 கோடியில் 263 புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது.

 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர். 

பின்னர் அவர்கள், பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 18 பேருக்கு பணி நியமன ஆணை மற்றும் 25 தள்ளுவண்டிகளை வழங்கினர். 

முன்னதாக ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, ஓராண்டு சாதனை மலர்களையும் அமைச்சர்கள் வெளியிட்டனர்.

சரிசெய்ய நடவடிக்கை

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, கோவையில் பழுதான சாலைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

 சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு 9 கோடி லிட்டர் குடிநீர் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது 2 கோடியே 40 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் கிடைக்கிறது. 

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்- மந்திரி பினராயி விஜயனுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார். மேலும் உயர் அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காணப்படும் என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, கோவை மாநகராட்சி பகுதியில் ரூ.196 கோடியில் 715 தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விடுபட்ட பகுதிகளில் விரைவில் தார் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது

நிரந்தர தீர்வு

கோவை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக் கடை அமைப்பது, குடிநீர் குழாய் அமைப்பது, கழிவுநீர் ஓடை கட்டுவது உள்ளிட்ட பணிகள் ரூ.24 கோடியில் நடந்து வருகிறது. 

இதுதவிர புலியகுளம் முதல் சவுரிபாளை யம் சாலை, அவினாசி சாலையில் 3 இடங்களிலும், எஸ்.என்.ஆர். சாலையில் ஒரு இடம் என்று மொத்தம் 5 சாலைகளை இணைக்க ரூ.144 கோடியில் பணிகள் நடைபெற உள்ளது.

ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. வெள்ள லூர் குப்பைக்கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகை யில் குப்பைகள் பயோமைனிங் முறையில் அழிக்கப்பட்டு வருகி றது. 

அதன்படி தற்போது வரை 16 ஏக்கரில் குப்பைகள் அழிக்கப் பட்டு உள்ளன. கோவை, மதுரை, சென்னையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆலை அமைக்கப்பட உள்ளது.

கடும் நடவடிக்கை

கோவை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்தது தொடர்பாக ஒருநபர் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது. 

செய்யாத பணிகளை செய்ததாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக 2 அதிகாரிகள், ஒரு ஒப்பந்ததாரர் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

இதுபோன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக அமைச்சர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்ட வாலாங்குளம் உள்பட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

மேலும் செய்திகள்