கோவை மாவட்டத்தில் 3,679 இடங்களில் பொது மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்
கோவை மாவட்டத்தில் 3,679 இடங்களில் பொது மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்
கோவை
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையொட்டி பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத் தில் 3,679 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
அங்கு பொது மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது
கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது.
இதுவரை முதல் மற்றும் 2- வது தவணை செலுத் தாதவர்கள் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 44 லட்சத்து 19 ஆயிரத்து 528 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 4 கோடியே 51 லட்சத்து 43 ஆயிரத்து 974 பேர் 2-வது தவணைத் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் குழுவினர், தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து நேரில் சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர்.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் வரும் வாரங்களில் நடத்தப்படும் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.