நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
வாணியம்பாடி
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தாட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணியை சாராயம் விற்றதாகக் கூறி விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், மறுநாள் காலை அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வாணியம்பாடி எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்ேகற்றோர், காவல் நிலையங்களில் விசாரணை மரணங்கள் நடப்பதைக் கண்டித்தும், தங்கமணியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது ெகாலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.