குழாயை வாயால் திறந்து தண்ணீர் குடிக்கும் மாடு

ஆரணியில் வெயிலின் தாக்கத்தால் குழாயை வாயால் திறந்து தண்ணீர் குடிக்கும் மாடு;

Update: 2022-05-08 12:53 GMT
ஆரணி

ஆரணியில் மட்டுமின்றி பல்ேவறு இடங்களில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 

தாகத்தால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் தண்ணீர் தேடி குடியிருப்புகளுக்கு வருவது வழக்கம்.

அதேபோல் சுட்டெரித்த ெவயிலால் தாகமெடுத்த ஒரு மாடு தண்ணீர் தேடி ஆரணி கோட்டை மைதானம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பக்கவாட்டில் உள்ள குழாய்க்கு வந்தது. 

அங்குள்ள குழாயை மாடு தனது வாயால் திறந்து தண்ணீர் குடித்தது. இந்தச் சம்பவம் அங்கு தினமும் நடந்து வருகிறது. 

இந்தக் காட்சிைய அங்குள்ள இளைஞர்கள் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்.

மேலும் செய்திகள்