51 ஊராட்சிகளில் வேளாண் சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 51 ஊராட்சிகளில் வேளாண் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 கிராம ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் மாதம் 7-ந் ்தேதி வரை வேளாண் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 2021-க்கான 51 கிராமங்களில் 15 தரிசு நிலங்கள் சொசைட்டி சட்டத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறு அமைக்க வேளாண் பொறியியல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
100 சதவீத மானியத்தில் பண்ணைக்குட்டை அமைத்தல், 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட் அமைக்க, இதர மானிய திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. சிறப்பு முகாமில் பட்டாமாறுதல், வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் பெறுதல், தண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பம் பெறுதல், மற்றும் சிறு குறு விவசாயி சான்று, விவசாய கடன் அட்டை வழங்கப்படுகிறது. காலை 8 மணி முதல் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
எனவே விவசாயிகள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.