கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

சிவன் கோவில் கும்பாபிஷேகத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

Update: 2022-05-08 12:34 GMT
ஆரணி

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் சமேத கைலாயநாதர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது.

 விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

விழாவில் பக்தர்கள் அதிகமாக பங்ேகற்றதால் கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்மநபர்கள் விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மனைவி சாந்தா (வயது 60) அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, ஏகாம்பரத்தின் மனைவி சூரியகலா அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி, நடராஜனின் மனைவி சகுந்தலா அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி என மொத்தம் 8 பவுன் நகையை கொள்ளையடித்தனர்.

இதுகுறித்து 3 பேரும் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

 போலீசார் விசாரித்து வருகின்றனர். சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்