கயத்தாறு பகுதியில் டாஸ்மாக் கடைகளில் பள்ளி மாணவர்களுக்கு மது விற்கக்கூடாது
கயத்தாறு பகுதியில் டாஸ்மாக் கடைகளில் பள்ளி மாணவர்களுக்கு மது விற்கக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.;
கயத்தாறு:
கயத்தாறு போலீஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்களுடன் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், கயத்தாறு தாலுகா பகுதியில் சுமார் 162 கிராமங்கள், 3 நகரப்பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியா் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் மது விற்கக்கூடாது. அப்படி மது வாங்க வரும் மாணவர்கள் குறித்து உரிய பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுக்கவேண்டும். இதை மீறி செயல்படும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவுறுத்தினார்.