பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பழனி:
பழனி குளத்து ரவுண்டானாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அருள்செல்வன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பழனியில் தனியார் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இதற்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.