நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கட்டிட மேஸ்திரி கைது

நல்லம்பள்ளி அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-08 00:11 GMT
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 4-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாலை மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தொப்பூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தொப்பூர் அருகே உள்ள சிவாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரிஷிந் (வயது21) என்பவர் மாணவியை கடத்தி சென்று பெங்களூருவில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெங்களூரு சென்று வாலிபரை கைது செய்தனர். தொடர்ந்து மாணவியை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர், மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்