அரூரில் லாரியில் மண் கடத்திய டிரைவர் கைது

அரூரில் லாரியில் மண் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-05-08 00:11 GMT
அரூர்:
தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு நிலை வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர் அரூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு நுரம்பு மண் கடத்தி செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தீனா (வயது22) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்