பன்னிகுளம் ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி

பன்னிகுளம் ஊராட்சியில் ரூ10 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை சம்பத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-08 00:11 GMT
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள பன்னிகுளம் ஊராட்சியில் வகுரப்பம்பட்டி-திப்பம்பட்டி சாலை முதல் பெரியசாமி கொட்டாய் வரை ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. விழாவிற்கு மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினர். கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், கம்பைநல்லூர் நகர செயலாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் வரவேற்று பேசினார். விழாவில் சம்பத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் செங்குட்டை கலையரசன், சேட்டு, வகுரப்பம்பட்டி சரவணன், வெற்றிவேல், பழனி, பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்