பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

Update: 2022-05-08 00:11 GMT
நீர் நிலைகளாக இருந்து நகர வளர்ச்சி காரணமாக தற்போது வரத்து வாய்க்கால், வடிகால் வாய்க்கால்கள் இல்லை என்ற நிலையில் அவற்றை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும்் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டனர். பின்னர், அங்கு மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமாரிடம் மனைப்பட்டா கேட்டு தனித்தனியாக மனுக்களை கொடுத்தனர்.

மேலும் செய்திகள்