அரசு நிலத்தை ஆக்கிரமித்து போடப்பட்ட முள்வேலி அகற்றம்

கருங்கல் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து போடப்பட்ட முள்வேலி அகற்றப்பட்டது.

Update: 2022-05-07 21:14 GMT
கருங்கல்:
கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து முள்வேலி போட்டிருந்தார். 
இது குறித்த புகாரின் பேரில் முள்வேலியை அகற்றும்படி தனிநபருக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் விடப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த தனிநபர் அகற்றவில்லை. இந்தநிலையில் நீர்வள ஆதார பிரிவு (பட்டணம் கால் பிரிவு) உதவி பொறியாளர் சுதர் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் முள்வேலியை அகற்றினர்.

மேலும் செய்திகள்