கேஎம்ஜிகல்லூரியில் பட்டமளிப்பு விழா
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலைஅரங்கில் நடைபெற்றது.
கே.வி.குப்பம்
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலைஅரங்கில் நடைபெற்றது.
கல்லூரி மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், பொருளாளர் கே.எம்.ஜி. முத்துக்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் விழாவைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மு.வளர்மதி ஆண்டறிக்கை வாசித்தார்.
நம்நாட்டின் தேசிய வங்கியின் நிதி மூலதனம் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதிய சுயாதீன இயக்குனர் டி.என்.மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்கலைக்கழக முதல் தரவரிசை பெற்ற இளநிலை நுண்ணுயிரியல் துறை மாணவி ஜெ.கவிதா, முதுநிலை வணிக கணினி பயன்பாட்டியல் துறை மாணவர் எம்.ராஜ்குமார், முதுகலை தகவல் தொழில் நுட்பவியல் துறை மாணவி எம்.ஸ்ருதி உள்பட 990 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர், மாணவர்களின் கனவுகள் நனவாக ஒழுக்கம், கடின உழைப்பு தேவை. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று குறிப்பிட்டார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வக்கீல் கே.எம்.பூபதி, ரோட்டரி சங்க கவர்னர் (தேர்வு) ஜெ.கே.என்.பழனி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் டி.என்.ராஜேந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் வினோத், கல்லூரி துணை முதல்வர் மு.மேகராஜன், ஒருங்கிணைப்பாளர் ஜா.ஜெயக்குமார், கே.எம்.ஜி.கல்விநிறுவனங்களின் பேராசிரியர்கள், திருவள்ளுவர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.