15 பேர் நிரந்தர பணியாளராக நியமனம்
மீனாட்சி அம்மன் கோவிலில் தினக்கூலியாக பணியாற்றிய 15 பேர் நிரந்தர பணியாளராக நியமனம்;
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் பணி, தட்டச்சர் என 15 பேர் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தனர். பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் 15 பேருக்கும் நேற்று பணி நியமன ஆணையை கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை வழங்கினார். இதில் கோவில் மேலாளர் முத்துராமலிங்கம் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு நேற்று புதிய இடம் வழங்கி அவர்கள் உடனே பணியில் சேர்ந்தனர்.