சித்துக்காடு ஊர்ப்புற கிளை நூலக கட்டிடம் சீரமைத்து தரப்படுமா?

சித்துக்காடு ஊர்ப்புற கிளை நூலக கட்டிடம் சீரமைத்து தரப்படுமா? என வாசகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-05-07 20:07 GMT
திருச்சிற்றம்பலம்:
சித்துக்காடு ஊர்ப்புற கிளை நூலக கட்டிடம் சீரமைத்து தரப்படுமா? என வாசகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஊர்ப்புற நூலகம்
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு கிராமத்தில் தஞ்சை மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் ஊர்ப்புற கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு நூல்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. 
காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியை சேர்ந்த வாசகர்கள் இந்த நூலகத்திற்கு வந்து தங்களுக்கு தேவையான நூல்களை எடுத்து படித்து வருகின்றனர். திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள ஒரே ஒரு கிளை நூலகம் சித்துக்காடு கிராமத்தில் மட்டும் தான் உள்ளது.
சேதமடைந்த கட்டிடம்
தற்போது நூலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டது என்றாலும் கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. 
சுவர்களில் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் கட்டிடம் முழுவதும் மழைநீர் ஒழுகுவதுடன் மழைக்காலங்களில் அங்குள்ள நூல்களை நனையாமல் பாதுகாப்பது பெரும் சிரமமாக உள்ளது. மேலும் நூலகத்திற்கு தேவையான போதிய அளவு தளவாட பொருட்களும் இல்லை.
சீரமைத்து தர எதிர்பார்ப்பு
சித்துக்காட்டில் செயல்பட்டு வரும் ஊர்ப்புற கிளை நூலக கட்டிடத்தை இனிமேலும் தாமதிக்காமல் சீரமைத்து தருவதுடன், அங்குள்ள நூல்களை பாதுகாப்பதற்கு உரிய தளவாட பொருட்களை வழங்க வேண்டும் என சித்துக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நூலக வாசகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்