தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
அடுக்கம்பாறை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுக்கம்பாறை
அடுக்கம்பாறை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணியம்பாடியை அடுத்த சின்னபாலம்பாக்கம் கிராமம் அமர்த்தி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். மதுபான பழக்கத்துக்கு அடிமையான அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சக்திவேல் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.