1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது

அதிராம்பட்டினம் பகுதியில் 1 மணிநேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-05-07 20:00 GMT
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் பகுதியில் 1 மணிநேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
சுட்டெரித்த வெயில் 
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. மேலும் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வீடுகளில் முடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணி அளவில்   திடீரென வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. 
1 மணிநேரம் கொட்டித்தீர்த்தது
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடி, மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை 1 மணிநேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் பஸ் நிலையம், கிழக்கு  கடற்கரைச்சாலை, கடலோர போலீஸ் நிலையம் ஆகியவற்றை மழைநீர் சூழ்ந்தது.  மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.  இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்்சி அடைந்தனர்.  
பட்டுக்கோட்டை 
பட்டுக்கோட்டையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை 5 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்