பிளஸ்-2 மாணவி தற்கொலை
சிவகாசி அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் புதூரை சேர்ந்த முனியாண்டி மகள் பூவேணி (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இது குறித்து அவரது சகோதரி பூபதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.