இலவச பொது மருத்துவ முகாம்

விருதுநகரில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-07 19:41 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட காவல்துறை, மதுரை ராக்ஸ் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மதுரை அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச மருத்துவ சிகிச்சை முகாம் விருதுநகர் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் அருள் உள்பட காவல்துறை அதிகாரிகள்  முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முகாமில் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்த சோதனை செய்தல், இருதய சிகிச்சை சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவ குழுவினர்கள் மற்றும் ராக்ஸ் பல்நோக்கு மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி பிரதீப் முகாமில் கலந்து கொண்டு காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.

மேலும் செய்திகள்