1,300 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

இலுப்பூர் அருகே 1,300 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-05-07 19:41 GMT
அன்னவாசல், 
இலுப்பூர் அருகே உள்ள வெள்ளை மரியால் கோவில் பகுதியில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 1,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடியை சேர்ந்த கலைவாணன், சரத்குமார், ராமராசு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், சரக்கு வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைபொருள் வழங்கல் புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்