கூகுள் பேமூலம் ரூ.40 ஆயிரத்தை இழந்தவருக்கு ஒரு மணி நேரத்தில் பணத்தை மீட்டு கொடுத்த சைபர் கிரைம் போலீசார்

கூகுள்பே மூலம் ரூ.40 ஆயிரத்தை இழுந்தவருக்கு ஒரு மணி நேரத்தில் சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு கொடுத்தனர்.;

Update: 2022-05-07 19:27 GMT
ராணிப்பேட்டை

கூகுள்பே மூலம் ரூ.40 ஆயிரத்தை இழுந்தவருக்கு ஒரு மணி நேரத்தில் சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு கொடுத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவு இயங்கி வருகிறது. ராணிப்பேட்டையைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் ரூ.40 ஆயிரத்தை கூகுள் பே மூலம் தவறான எண்ணுக்கு அனுப்பி விட்டதாகவும், பணத்தை மீட்டு தருமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு நேற்று காலை 10 மணியளவில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன் தலைமையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசார் உடனடியாக செயல்பட்டு ஒரு மணி நேரத்தில் பணத்தை மீட்டனர். அந்தப் பணத்தை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், பாதிக்கப்பட்ட சார்லசிடம் நேற்று வழங்கினார். ஒரு மணி நேரத்தில் பணத்தை மீட்டு வழங்கியதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும், போலீசாருக்கும் சார்லஸ் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்