அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவநேசன் தலைமை தாங்கினார். விழாவில் திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் மேகலா கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் ஆளுமை பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு ஆகிய பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் வெற்றிக்கான பாதை எளிதானதாகும். மாணவர்கள் முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிக்கலான சூழ்நிலைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வது மட்டுமல்லாது, சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியும், என்றார். விழாவில் கிராமப்புறங்களில் இருந்து வந்து பயின்று இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பினை முடித்த 435 மாணவர்கள் மற்றும் 300 மாணவிகள் என மொத்தம் 735 பேர் பட்டங்களைப் பெற்றனர். இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் முத்துராஜ் நன்றி கூறினார்.