போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்

போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சமடைந்தனர்.

Update: 2022-05-07 19:11 GMT
ஜெயங்கொண்டம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பட்டக்கல் தெரு அம்பேத்கர் நகர் மேலக்காவேரியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் மாதவன்(வயது 27). பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கத்தின் மகள் ஐஸ்வர்யாவை(23) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஐஸ்வர்யா பி.எட். படித்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு ஐஸ்வர்யா வீட்டை சேர்ந்தவர்கள் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதவனும், ஐஸ்வர்யாவும் அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தங்களது திருமணம் பற்றி பெற்றோர்களுக்கு தெரிந்தால், பிரச்சினை செய்து தங்களை பிரித்து விடுவார்களோ? என்று எண்ணிய காதல் திருமண ஜோடி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் அவரது திருமணம் குறித்து கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்கள் விசாரணைக்கு வந்தனர். இது குறித்து கும்பகோணம் பகுதியில் உள்ள பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் தகவல் தெரிவித்து, அங்கு காதல் திருமண ஜோடியை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்