தா.பழூர் பகுதியில் பலத்த மழை

தா.பழூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-05-07 19:11 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் சித்திரை மாத தொடக்கத்தில் இருந்தே பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்தது. கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியதால் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் இரவு நேரங்களிலும் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவில் புழுக்கம் நிலவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் திடீரென குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு முதல் விடியும் வரை பரவலாக விட்டுவிட்டு மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்