கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது.
கரூர்,
தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி நேற்று கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தி.மு.க.வினர் கொண்டாடினர்.
இதில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மத்திய மாநகர பொறுப்பாளர் எஸ்.பி.கனகராஜ், தெற்கு மாநகர பொறுப்பாளர் சுப்பிரமணியன், மத்திய கிழக்கு மாநகர பொறுப்பாளர் கோல்டுஸ்பாட் ராஜா, மத்திய மேற்கு மாநகர பொறுப்பாளர் அன்பரசன், இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.