மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-05-07 18:32 GMT
கரூர்
நொய்யல், 
தளவாபாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 53). கூலித்தொழிலாளி. இவர் அய்யம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தளவாபாளையம் மலையம்மன் கோழிப்பண்ணையில் வேலை செய்யும் கஜேந்திரன் (56) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்று கொண்டிருந்த ராமன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராமனின் மகன் சிவா கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்