வீட்டின் ஜன்னலை உடைத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு

வீட்டின் ஜன்னலை உடைத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-05-07 18:22 GMT
கரூர்
தோகைமலை, 
தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி கீழவெளியூர் பிள்ளையார் கோவில்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்தவர் சின்னகாளை (42) என்பவருக்கும் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணி தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த சின்னகாளை மற்றும் அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை ஆகியோர் சுப்பிரமணியிடம் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்து திட்டி விட்டு, வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் சின்னக்காளை, சின்னத்துரை மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்