டிபார்மசி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா
திருப்பத்தூர் அருகே மண்டலவாடியில் உள்ள ஜி.பி.பார்மசி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டி.பார்மசி மாணவ, மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே மண்டலவாடியில் உள்ள ஜி.பி.பார்மசி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டி.பார்மசி மாணவ, மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் என்ஜினியர் ஜி.பொன்னுசாமி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் தீன்குமார் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஈஸ்வரி பொன்னுசாமி கல்வி அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.