கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Update: 2022-05-07 17:26 GMT
கடலூர் முதுநகர், 

தெற்கு அந்தமான் வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்பட்சத்தில், இதற்கு ‘அசானி புயல்’ என பெயர் வைக்கப்படும் என்றும், இந்த புயல் மேலும் வலுவடைந்து, வருகிற 10-ந் தேதி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது, தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

மேலும் செய்திகள்