தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வால்பாறை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.;
வால்பாறை
வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் 2-வது பிரிவை சேர்ந்தவர் சக்திவேல், டிரைவர். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 26). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.