கலெக்டர் அலுவலகம் முன்பு மவுன விரதம் ராமானுஜ தாச ஜீயர் அறிவிப்பு

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்க அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு மவுன விரதம் இருக்கப்போவதாக ராமானுஜ தாச ஜீயர் அறிவித்துள்ளார்.;

Update: 2022-05-07 18:45 GMT
குத்தாலம்:-

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்க அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு மவுன விரதம் இருக்கப்போவதாக ராமானுஜ தாச ஜீயர் அறிவித்துள்ளார். 

குரு-சிஷ்ய வழிபாட்டு முறை

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவுக்கு ஆன்மிகவாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் மடத்தின் வாயு சித்த ராமானுஜ தாச ஜீயர் சுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:- 
குரு-சிஷ்ய வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் வைபவம் நடைபெறுகிறது. ஆன்மிகத்துக்கு தொடர்பில்லாத சிலர் கூறுகிறார்கள் என்பதற்காக இதற்கு அரசு தடை விதித்தது தவறு. 

தலையிடுவது தவறு

ஆன்மிகத்துக்கு சம்பந்த மில்லாதவர்கள் கோவில் வழிபாட்டு முறைகளில் தலையிடுவது தவறு. 
 தீமிதித்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வழிபாட்டு முறைகளையும் இவர்கள் தடை செய்வார்களா?   தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்க அனுமதி கேட்டு விரைவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மவுன விரதம் இருந்து போராட்டம் நடத்துவேன். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்