மனைவியிடம் கூறிவிட்டு டிரைவர் தற்கொலை
சங்கராபுரம் அருகே மனைவியிடம் கூறிவிட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டாா்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). டிரைவர். இவரது மனைவி சத்யா, கணவருடன் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த ராஜ்குமார், தனது மனைவியிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.