மாரியம்மன் கோவில் தேரோட்டம்

பொண்ணியந்தல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-05-07 16:53 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே பொண்ணியந்தல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், முக்கிய தெருக்களில் அசைந்தாடி வந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

மேலும் செய்திகள்