மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி

குஜிலியம்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2022-05-07 16:50 GMT
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே உள்ள மெத்தைப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 23). வேன் டிரைவர். கடந்த 4-ந்தேதி இவர், மோட்டார் சைக்கிளில் கரூர் நோக்கி சென்றார். வெள்ளப்பாறையை அடுத்த தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பஸ், திருமுருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருமுருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திருமுருகன் உயிரிழந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்