கோபால்பட்டி அருகே மீன்பிடி திருவிழா

கோபால்பட்டி அருகே மொட்டயகவுண்டன்பட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-05-07 16:47 GMT
கோபால்பட்டி:
கோபால்பட்டி அருகே மொட்டயகவுண்டன்பட்டியில் உள்ள செங்குளத்தில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. முன்னதாக இதில் பங்கேற்க வேம்பார்பட்டி, அய்யாபட்டி, நத்தம், சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, பொன்னமராவதி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாரை, சாரையாக செங்குளத்திற்கு அதிகாலையிலேயே திரண்டு வந்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் மீன்பிடி திருவிழா தொடங்கியது. அப்போது சுமார் 500-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்பிடித்தனர். அவர்கள் மூங்கில் கூடை, வலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை உள்பட பலவகை மீன்கள் பிடிபட்டன. இருப்பினும் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்த அளவே மீன்கள் கிடைத்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் பிடித்த மீன்களை பொதுமக்கள் தங்களது வீட்டில் சமைத்து சாப்பிட்டனர்.

மேலும் செய்திகள்