விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் தொல்லியல் பொருட்கள் கண்காட்சி

விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் தொல்லியல் பொருட்கள் கண்காட்சி;

Update: 2022-05-07 16:44 GMT

விழுப்புரம்

விழுப்புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலைக்கல்லூரியும் விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையமும், புதுச்சேரி கலை அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு மையமும் இணைந்து மகளிர் கல்லூரியில் வரலாற்றுத்துறை மாணவிகளுக்கு தொல்லியல் பட்டய சான்றிதழ் படிப்பு அளித்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக மாணவிகளுக்கு தொல்லியல் பொருட்கள் மூலம் நேரடியாக பாடம் புகட்டும் வகையில் வரலாற்று ஆர்வலரும் விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவருமான வீரராகவன், அவரது துணைவியார் மங்கையர்கரசி, தொல்பொருள் கண்காட்சி பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்தி கண்காட்சியாக வடிவமைத்தனர். இதனை கல்லூரி முதல்வர் கணேசன், வரலாற்றுத்துறை தலைவர் ரேணுகாம்பாள் மற்றும் அனைத்து பேராசிரியர்கள், வரலாறு மற்றும் அனைத்துத்துறை மாணவிகளும் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்