உலுப்பக்குடி மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா
நத்தம் அருகே உலுப்பக்குடியில் உள்ள மந்தை முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
நத்தம்:
நத்தம் அருகே உலுப்பக்குடியில் பிரசித்தி பெற்ற மந்தை முத்தாலம்மன் மற்றும் வல்லடியார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா 4 நாட்கள் நடந்தது. தோரணமரம் ஊன்றுதல் நிகழ்ச்சியுடன் முதல்நாளில் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் இரவு தீவட்டி பரிவாரங்கள், வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்த அம்மன், மேளதாளம் முழங்க கோவில் முன்புள்ள மந்தையில் எழுந்தருளினார்.
அப்போது அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மறுநாள் 2-ம் நாளில் காலையில் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, பூத்தட்டு, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 3-ம் நாளில் வர்ண குடைகளுடன் பக்தர்கள் கூட்டத்தில் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார். பின்னர் மந்தையில் வல்லடியார் சுவாமி, முன்னோடி கருப்பு, கன்னிமார் சுவாமிகள் கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சுவாமிகள் மற்றும் கரகம் ஊர் மந்தையில் வைக்கப்பட்டது. அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
திருவிழாவின் 4-ம் நாளான நேற்று மாலை வல்லடியார், முன்னோடிகருப்பு, கன்னிமார் சுவாமிகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கரந்தமலைக்கு எடுத்து செல்லப்பட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உலுப்பக்குடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.