சோளிங்கரில் பிரமோற்சவ விழா நாகவாகனத்தில் தேவியருடன் பக்தோசித பெருமாள் பவனி
சோளிங்கரில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று நாக வாகனத்தில் தேவியருடன் பக்தோசித பெருமாள் அருள் பலித்தார்.
சோளிங்கர்
சோளிங்கரில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று நாக வாகனத்தில் தேவியருடன் பக்தோசித பெருமாள் அருள் பலித்தார்.
சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் சித்திரை தேர் பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இதன் இரண்டாம் நாள் விழாவையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு வகையான நறுமணப் பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின் பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நாகவாகனத்தில் எழுந்து அருளி மங்கள வாத்தியங்களுடன் 8 மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.