கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

நாகை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-07 18:30 GMT
வெளிப்பாளையம்:
நாகையை அடுத்த பாலையூரில் பாலவிநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலின் முன்பகுதி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்