சின்னசேலத்தில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கினர்

அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைசின்னசேலத்தில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கினர்.;

Update:2022-05-07 20:40 IST
சின்னசேலம், 

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சின்னசேலத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவருமான வக்கீல் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 
பின்னர் அவர், தமிழக அரசால் ஓராண்டில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய திட்டங்களான மகளிருக்கான இலவச பயணம், இல்லம் தேடி கல்வித்திட்டம், மாதிரி பள்ளிகள், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, உழவர் நலன், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், நகை கடன் தள்ளுபடி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம் உள்ளிட்ட பல திட்டங்களை எடுத்து கூறினார்.  அப்போது மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், சின்னசேலம் தி.மு.க. ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்