ஓராண்டு சாதனை மாவட்ட மலரை கலெக்டர் வெளியிட்டார்

முதல்-அமைச்சர் ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ராமநாதபுரம் மாவட்ட மலரை கலெக்டர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார்.

Update: 2022-05-07 15:05 GMT
ராமநாதபுரம், 
முதல்-அமைச்சர் ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ராமநாதபுரம் மாவட்ட மலரை கலெக்டர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார்.
சாதனை
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ராமநாதபுரம் மாவட்ட மலரை கலெக்டர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் மலரை பெற்றுக் கொண்டனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:- ராமநாத புரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த பல்வேறு திட்டங்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 
அதன்படி மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 3,67,759 பேருக்கு 5 நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நோய்கள் வரும்முன் அதனை தடுக்கும் பொருட்டு கடந்த ஓராண்டில் 33 முகாம்கள் நடத்தப்பட்டு நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 19,873 பேர் பயனடைந்து உள்ளனர். 
நிவாரண உதவி
இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 117 பயனாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று பயனடைந்து உள்ளனர். கொரோனா சிறப்பு நிவாரண உதவியாக 3,77,841 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.151.13 கோடி வழங்கப்பட்டுஉள்ளது. 
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 3,78,146 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.15.12 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுஉள்ளது. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 6630 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 6072 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. 
புதிய மின் இணைப்பு
கோவில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 209 கோவில்களில் பணிபுரியும் 209 அர்ச்சகர்கள் ரூ.ஆயிரம் மாத ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.2.09 லட்சம் வழங்கப்பட்டு பயனடைந்து உள்ளனர். விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 2.18 கோடி செலவில் 366 பேருக்கு புதிய மின்இணைப்புகள் வழங்கப் பட்டு விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். 
இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் 66,923 மாணவ, மாணவிகள் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் சேர்க்கப்பட்டு, 3,423 பெண் தன்னார்வலர்கள், மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு பயனடைந்து உள்ளனர். புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 790 விவசாயிகளுக்கு 72000 மரக்கன்றுகள் ரு.10.8 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு உள்ளன. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்