திமுக அரசின் ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்த தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திராவிட மாடல் என்பதைவிட திராவிட மாதிரி என முழுமையாக தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்

திமுக அரசின் ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்த தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திராவிட மாடல் என்பதைவிட திராவிட மாதிரி என முழுமையாக தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்

Update: 2022-05-07 14:33 GMT
கோவை

தி.மு.க அரசின் ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்த தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிட மாடல் என்பதைவிட திராவிட மாதிரி என முழுமையாக தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது

இறப்பு விகிதம்

ஸ்வச் பாரத்தில் முதல் 100 நகரங்களில் 75 நகரங்களுக்கு உள்ளான பட்டியலில் கோவை இருப்பது மகிழ்ச்சி. இப்படிப் பட்ட கூட்டங்களுக்கு நாம் வர முடிவதற்கு காரணம் தடுப்பூசி எடுத்துக் கொண்டதே ஆகும். 

இதற்காக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எனது பாராட்டுக்கள். தமிழக அரசு முககவசம் போட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் பிறப்பிற்கும் இறப்பிற்கும் சரியான பதிவை கடைபிடிக்கிறோம். இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகம் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை.

ஓராண்டு நிறைவு

தமிழகத்தில் ஓராண்டு நிறைவு செய்த தி.மு.க. அரசுக்கு வாழ்த்துகள். இன்னும் 4 ஆண்டுகள் நிறைவு செய்ய வேண்டும். 

பல நல்ல திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். திராவிட மாடல் என்று சொல்வதை விட திராவிட மாதிரி என முழுமையாக தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே? என்ற ஒரு சிறிய யோசனை உள்ளது.

மற்ற மொழியை வேண்டாம் என சொல்வதைவிட நம் மொழியை முழுமையாக கற்றுக்கொள்வோம். 

புதிய கல்விக் கொள்கையில் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா தடுப்பூசி

முன்னதாக தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது

நம் நாட்டில் தயாரித்த தடுப்பூசியை 150 கோடி மக்களுக்கு மேல் போட்டுவிட்டு 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றால்  இந்தியனாக பெருமையுடன் இருக்கிறேன். 

பெண்களை கேன்சர் பயமுறுத்துகிறது. எனவே பெண்கள் வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தினமும் யோகா செய்ய பழகிக் கொள்ளுங்கள். 

பெண்கள் வயதுக்கு வரும் சூழலில் கழிப்பறை இல்லாததால் படிப்பை விட்டுள்ளனர். கல்வி அறையைப் போல கழிப்பறை உள்ளதா? என்பதையும் பார்க்க வேண்டும். 

இதில், பிரதமர் சுவச் பாரத் மூலம் மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தாய்மொழி

தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும். இன்னொரு மொழி யை கற்றுக் கொள்வதில் சிலருக்கு சிரமம் உள்ளது. அதனால் கற்றுக் கொள்ள மாட்டேன் என்கின்றனர். 

சிலர், தாய்மொழி யையும், மற்ற மொழியையும் கற்றுக்கொள்வதில்லை.போலியோ ஒழிப்பை போல போதை ஒழிப்பில் ரோட்டரி கிளப் பங்கு கொள்ள வேண்டும். 

இந்தியாவில் 10 கோடி பேர் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்