தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Update: 2022-05-07 14:31 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கலெக்டரிடன் உத்தரவின் பேரில் தொடந்து திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உத்தரவின் பேரில் நகர நல அலுவலர் மோகன், துப்புரவு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் மற்றும் நகரில் உள்ள முக்கிய வணிக நிலையங்களில் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 

இதன் மூலம் சுமார் 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் சுமார் ரூ.12 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்