குடியிருப்பு பகுதியில் புகுந்த மானை மீட்ட வனத்துறையினர்

திருவண்ணாமலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மானை வனத்துறையினர் மீட்டனர்;

Update: 2022-05-07 14:29 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. 

கடந்த சில தினங்களாக திருவண்ணாமலையில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. 

இதனால் போதிய தண்ணீர், உணவு கிடைக்காமல் தவித்து வரும் சில மான்கள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. 

இந்தநிலையில் மலை அடிவாரப்பகுதியில் உள்ள புதுவாணியங்குளம் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று காலை உணவு தேடி வந்த மான் ஒன்று புகுந்தது. 

அப்போது சுவற்றில் மோதி மானுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மானை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.

 இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்