ஊட்டியில் புகைப்பட கண்காட்சி

ஊட்டியில் புகைப்பட கண்காட்சி;

Update: 2022-05-07 14:15 GMT
ஊட்டி

கோடை சீசனையொட்டி சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அரியவகை பறவைகள், வனவிலங்குகளின் புகைப்பட கண்காட்சி, ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தோட்டக்கலை வளாகத்தில் தொடங்கியது. இதனை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித், உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் நவீன் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

கண்காட்சியில் தேன்சிட்டு, நீலச்சிட்டு, மரங்கொத்தி, பச்சை சிட்டு, மாங்குயில், பட்டாணி குருவி, நீலகிரி காட்டுப்புறா, மஞ்சக்கால் புறா, பச்சைப்புறா, கிளி, குயில், மயில், மீன்கொத்தி, குருட்டு கொக்கு, சாம்பல் நாரை, கொண்டை நீர்க்காகம், நெட்டைக்காலி, வெள்ளை வாலாட்டி, வயல் கதிர்க்குருவி, சிட்டுக்குருவி, தினைக்குருவி, கவுதாரி, கண்டாங் கோழி, வர்ணக்காடை, காட்டுக்கோழி, காட்டு சேவல் உள்ளிட்டவைகளில் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும் வனவிலங்குகள், வண்ணத்துப்பூச்சிகள், நீர்வீழ்ச்சிகளின் புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன. இந்த கண்காட்சி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும். நுழைவு கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்