புனித அந்தோணியார் ஆலய திருவிழா திருப்பலி
ஏரல் அருகே திருவழுதிநாடார்விளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.
ஏரல்:
ஏரல் அடுத்துள்ள திருவழுதிநாடார்விளை புனித கரிந்த கை அந்தோணியார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஆலய அர்ச்சிப்பு மற்றும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமை தாங்கினார். பங்குத்தந்தை ஜான்சன் முன்னிலை வகித்தார். விழாவில் காலை ஜெபமாலை நற்செய்திக் கூட்டம் நடந்தது. தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி, திருப்பலி, ஆலய அர்ச்சிப்பு, அசன விருந்து நடந்தது. இதில் திருவழுதிநாடார்விளை, ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஏரல் சூசையப்பர் ஆலயத்தில் இருந்து சப்பர பவனி புறப்பட்டு புனித கரிந்த கை அந்தோணியார் ஆலயத்திற்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் ஜெபமாலை, மாலை ஆராதனை நடக்கிறது. 15, 16-ந் தேதிகளில் மறையுரை, திருப்பலி, அசன விருந்து கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.