20 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 தாசில்தார்களை அதிரடியாக மாற்றம் செய்து கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-05-07 13:01 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 தாசில்தார்களை அதிரடியாக மாற்றம் செய்து கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு தனி தாசில்தார் சரவணன் கீழக்கரை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய முருகேசன் ராமநாதபுரம் தலைமையிட தாசில்தாராகவும், அந்த இடத்தில் பணியாற்றி ரவிச்சந்திரன் ஆய மேற்பார்வை அலுவலராகவும், அங்கு பணியாற்றிய சிரோன்மணி ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றிய செண்பகலதா கோட்ட ஆய அலுவலராகவும், அங்கு பணியாற்றிய செய்யது முகம்மது டாஸ்மாக் உதவி மேலாள ராகவும், அங்கு பணியாற்றிய சிக்கந்தர்பபிதா கமுதி தாசில்தாராகவும், அங்குபணியாற்றிய மாதவன் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 
கடலாடி
அந்த இடத்தில் பணியாற்றி வந்த சண்முகசுந்தர் நகர நிலவரி திட்ட தனிதாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த சாந்தி ஆதிதிராவிடர் நல தனிதாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய முத்துலட்சுமி பரமக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அந்த இடத்தில் பணியாற்றி கோபால் பரமக்குடி நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த சிவக்குமார் முதுகுளத்தூர் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலாடி தாசில்தார் சேகர் ஆர்.எஸ்.மங்கலம் தாசில் தாராகவும், அங்கு பணியாற்றி வந்த முருகவேல் கடலாடி தாசில்தாராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். முதுகுளத்தூர் தாசில்தார் செந்தில்குமார் மாவட்ட வழங்கல் பறக்கும்படை தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய பரமசிவன் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றி வந்த ராஜகுரு தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 
உத்தரவு
ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் முருகேசன் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த தமிழ்செல்வி குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்