முதியவரை அரிவாளால் வெட்டியவர் கைது

முதியவரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-07 12:58 GMT
தொண்டி, 
திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராயர் (வயது 75). இவருக்கும் தெற்கு ஆண்டா வூரணி கிராமத்தைச் சேர்ந்த இன்னாசிமுத்து (57) என்ப வருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு திண்ணையில் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த ராயரை நள்ளிரவில் இன்னாசிமுத்து அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த ராயர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து ராயரின் பேரன் பனிச்சகுடி கிரா மத்தை சேர்ந்த பழனிவேல்(41) எஸ்.பி.பட்டினம் போலீசில் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்னாசிமுத்துவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்